உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வருவதை முன்னிட்டு நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தற்போது அதிகரித்துள்ள உலக சந்தை எரிபொருள் விலைக்கு ஏற்ப நாட்டின் எரிபொருள் விலையின் சுமையை மக்கள் மீது சுமத்தாமல் மானியம் வழங்குவது குறித்து அரசாங்கம் தற்போது கலந்துரையாடி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கமைய, இதற்காக திறைசேரியில் உள்ள பணத்தில் ஒரு பகுதியை பயன்படுத்தி அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு மானியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் மானிய தொகை எவ்வளவு என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று கூறிய அமைச்சர், உலக சந்தையில் அதிகரிக்கும் முழு தொகையையும் மக்கள் மீது சுமத்தாது அரசாங்கம் நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.








