வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரை பகுதியில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
குறித்த விவகாரம் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் இந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதுடன் அதற்கருகில் பௌத்த கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் உகந்தமலையில் முருகன் சிலை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் குறித்த புத்தர் சிலை கடற்படைக்குச் சொந்தமான பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் பிரபல சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உகந்தமலையில் வள்ளியம்மன் மலையில் கடந்த காலத்தில் முருகன் சிலையை நிறுவுவதற்கு முன்னாள் கிழக்கு ஆளுநர் அமைச்சர்கள் முதல் ஆலய நிர்வாகத்தினர் முயற்சி செய்த போது அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், வேறொரு மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருப்பது குறித்து இந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன மத பேதம் பார்க்கப்படாத இன்றைய அரசாங்கத்தின் கவனத்திற்கு இதனை கொண்டு வருகிறோம். உரிய நீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்ட போது………….
காணொளி
அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவான கோடீஸ்வரன் இந்த பிரச்சினை தொடர்பில் நேரடியாக சென்று பார்வையிடாமை குறித்து மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
2020ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றதேர்தலில் கோடீஸ்வரன் எம்.பி. தோல்வியடைந்தமைக்கு இதுவே பிரதான காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றனர்.
தேர்தல் காலங்களில் உணர்ச்சிவசப்பட்ட வீரப் பேச்சும் உசுப்பேத்தும் அரசியலை செய்து வரும் கோடீஸ்வரன் உகந்தை பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் ஒரு தோல்வியை சந்திப்பார் என்பதில் ஐயம் இல்லை








