மறைந்த பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) மாலை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திற்கு சென்று ஜனாதிபதி மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் அஞ்சலி செலுத்த சென்ற சக கலைஞர்களுடன் சுமூகமாக உரையாடிய ஜனாதிபதி, பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் மறைவுக்காக கலைத்துறையில் உள்ள அனைவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.









