ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரையில் சகல அஞ்சல் பணியாளர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி அஞ்சல்மா மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here