புத்தளம் , கல்பிட்டி, கப்பலடி கடற்கரை பகுதியில் இன்று சனிக்கிழமை  (24.08) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, 776 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலைகள் அடங்கிய 24 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பீடி இலை பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காகக் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here