நுவரெலியா வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் பாவித்த பொருட்களைச் சேமித்து வைத்திருந்த அறையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

தீயை நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவு சில மணித்தியாலங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக மாவட்ட தீயணைப்புப் பிரிவு தெரிவித்தது.

இந்த தீப்பரவல் நேற்று மாலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவல் சம்பவத்தில் மனித உயிருக்குப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலுக்குள்ளான அறையில் வைக்கப்பட்டிருந்த சமையல் உபகரணங்கள், இலத்திரனியல் உபகரணங்கள், தளபாடங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகியுள்ளன.

தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தடயவியல் காவல்துறையின் உதவியுடன் நுவரெலியா காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here