அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, உப்பு, தேங்காயெண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியின் போது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த விசேட பண்டவரி கடந்த 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
எனினும் குறித்த வரிகளைத் தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.







