சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் டுபாயில் வருகின்ற  19 ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி  வரை நடைறெவிருக்கின்றது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் டுபாயில் நடைபெறுகின்றது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் 19 ஆம்  திகதி பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின்போது தொடை பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குணமடைய குறைந்தபட்சம் 2 வாரங்கள் ஆகும் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜேக்கப் டுஃபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here