நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட மின் விநியோகத் தடைக்கு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மின் விநியோகத் தடை காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தாம் வருந்துவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் மீண்டும் இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவாக செயல்படுத்தப்படும் என்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here