நாளாந்தம் அதிகரித்துவரும் உலக சனத்தொகைக்கு ஏற்ப உணவை வழங்குவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் மக்கள் உணவு உண்பதற்கே கஷ்டப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை தாம் நிறைவேற்றி வருகின்றேன்.

தொடர்ந்தும் அதனை நிறைவேற்றுவதால் மாத்திரமே, நாட்டின் பொருளாதார நிலைமையை உயர்த்த முடியும்.

உணவு உற்பத்தியை அதிகரித்து, உலக சனத்தொகைக்கு ஏற்ப உணவு வழங்குவதே எமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here