தமிழ் சினிமாவில் உச்ச நாயகியாக இருக்கும் த்ரிஷா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் இருக்கும் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா.

இவர், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை மிக நேர்த்தியாக பேசத் தெரிந்த நடிகை. சென்னை பிறப்பிடமாக கொண்ட த்ரிஷா கிருஷ்ணன் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் களமிறங்கி விட்டார்.

கடந்த 1999ம் ஆண்டு “Miss Chennai” ஆக இருந்த த்ரிஷா, பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான “ஜோடி” படத்தின மூலம் சினிமாவிற்குள் என்றி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான சூர்யாவின் “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மாறிவிட்டார்.

சினிமாவிற்கு வந்த பின்னர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்கும் ஆற்றல் த்ரிஷாவிற்கு உண்டு, இதனால் அடுத்தடுத்து “மனசெல்லாம்”, “சாமி”, “லேசா லேசா”, “அலை” மற்றும் “எனக்கு 20 உனக்கு 18” ஆகிய படங்களை தன்வசப்படுத்திக் கொண்டார்.

இதற்கிடையில் தெலுங்கு திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைக்க, தற்போது பாலிவுட் வரை பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். தற்போது சினிமா, சமூக வலைத்தளங்கள் என இரண்டிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

உலக சாதனை

இந்த நிலையில், தற்போது த்ரிஷாவிற்கு 41 வயதானாலும் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகை திரிஷா நடித்த “அத்தடு ” திரைப்படம் உலக சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் அதிக முறை ஒளிபரப்பான படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

1,500 முறை ஒளிபரப்பாகிய இந்த திரைப்படத்தில் மகேஷ்பாபு  கதாநாயகராக நடித்துள்ளார். அத்துடன்  பிரகாஷ்ராஜ், சோனு சூட், நாசர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சுமாராக 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “அத்தடு” திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here