உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அறிவிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

குறித்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.ஏல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவடைந்து 21 நாட்களில் குறித்த பெயர் பட்டியல் அறிவிக்கப்பட வேண்டும்.

எனினும் தற்போது வரை தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களில் பெரும்பாலானவை குறித்த பெயர் பட்டியலை சமர்ப்பிக்கவில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.ஏல். ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here