உழவு இயந்திரத்தில் கனரக வாகனம் மோதியதில் சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார் மற்றைய நபர் காயம் அடைந்து நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மல்வத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் நேற்று சனிக்கிழமை (05.10) மாலை 04.15 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் சம்மாந்துறை விளினியடி 03 சேர்ந்த அசனார் முகம்மட் இஸ்மாயில் (வயது 64) என்பவரே ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்து நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறையை சேர்ந்த அசனார் முகம்மட் இஸ்மாயில் (வயது 64) என்பவரே இவ்விபத்தில் மரணமடைந்துள்ளார்.
விபத்தில் மரணமடைந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கனரக வாகனத்தை செலுத்திய சாரதியை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








