உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, ராகம – வல்பொல பகுதியில் இந்தக் கொலைக்கான சதித்திட்டங்களை முன்னெடுத்தவரெனச் சந்தேகிக்கப்படும் ஒருவரை பமுணுகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 12 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.








