ஐக்கிய தேசியகட்சியிலிருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மீளவும் எமது கட்சிக்கு வரவேண்டும் எப்பொழுதும் கதவுகள் திறந்திருக்கும் .உங்களுடைய முன்னாள் தலைவரை வெற்றி பெற வைக்க வேண்டும் விஜயகலா மகேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டபின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலை பெற்றோல், எரிவாயு இல்லாத நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூன்று வேளை உணவை மக்களுக்கு பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதனால் அபிவிருத்தி பெரிதாக இடம்பெறவில்லை தற்போது ஜனாதிபதி தேர்தல் வந்திருக்கிறது. பிரச்சாரத்தை செய்ய முடியாத நிலையுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த கால பொருளாதார வீழ்ச்சியை ரணில் விக்கிரமசிங்க தனி ஒரு மனிதனாக நின்று நிறைய பிரச்சனையை தீர்த்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் வெற்றி உறுதியாகியுள்ளது. தெற்கில் பல கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்கு அப்பால் சர்வதேச ரீதியிலும் பேசப்படும் ஒருவர் அவர்.

நேற்றைய தினம் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜானாமா செய்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வந்துள்ளனர்.

தலதா அத்துகோரலவுக்கு நன்றி சொல்கிறேன் தாங்கள் விட்ட பிழைகளை உணர்ந்து இங்கால வந்துள்ளனர்.

நாட்டை போர் குற்றங்களிலிருந்து மீட்டு சுபீட்சமான நாடாக மலர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here