தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று(08) இடம் பெற்றது.
குறித்த சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உரையாற்றுகையில்,
எங்களுக்கு வாக்களித்த உறவுகளுக்கு நன்றிகள்.
சட்ட போராட்டத்திலும் ஈடுபட்டோம். அந்த முயற்சியும் தோல்வி. 10 நாட்களே பிராசரத்திற்காக செலவு செய்தோம். நாங்கள் அடைந்த அடைவு மிகையானது.
யாழ் மாநாகர சபையில் நிராகரிக்கப்பட்டது.நல்லூர் பிரதேச சபையில் 6, காரைநகரில் 2 ஆசனம் பெற்றுள்ளோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்காக சேவையாற்றுவோம்.
நல்லூர் மற்றும் காரைநகரில் நாம் ஆட்சி அமைத்தால் நாம் சபைகளை சிறப்பான முறையில் எடுத்து செல்வோம்.
தேசிய மக்கள் சக்தியை நிராகரிக்க கோரி வந்தோம். ஏனைய தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையை ஏற்றமைக்கு நன்றிகள்.
தமிழ் தேசியத்தோடு தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்பதனை இந்த தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது.இந்த தேர்தலின் பெறுபேறுகள் நமக்கு உத்வேகத்தை தந்துள்ளது.
பல்வேறு தடைகளை மீறி தமிழ் மக்கள் கூட்டணியின் இந்த பெறுபேறுகளை அடைந்துள்ளது. இனிவரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் கூட்டணி வீறு கொண்டு நடக்கும். சதியோ விதியோ தெரியவில்லை.
மாநாகர சபை முதல்வர் பதவி முக்கியமான பதவி, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்பவர்கள் மாநகர முதல்வரைச் சந்திப்பார்கள்.
தமிழ் தேசியம் விலை போகாதவாறு நிர்வாகத்தை சிறப்பாக உரிய இராஜ தந்திரமாக திட்டங்களை சிறப்பாக நடத்த வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதுதான் எமது நோக்கம், அவர்களுடன் கூட்டு சேர்ந்தால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம். அவர்கள் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் அவர்கள் டீலுக்கு போவார்கள்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]







