இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கொழும்பில் சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவை பலப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை-இந்தியா இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் மக்கள் தொடர்புகளின் ஆழமான பிணைப்பு இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதேநேரம் இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக நெருக்கமான, ஆக்கபூர்வமான மற்றும் தொடர்ச்சியான ஈடுபாடு அவசியம் என சஜித் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான ஒத்துழைப்பு உட்பட பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








