“இலங்கை தீர்மானங்களை எடுக்கும்போது தேசிய தேவைகள் மற்றும் பிராந்திய தேவைகள் இரண்டையும் கருத்தில் கொள்கிறது” என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  இன்று (9) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக உலகின் பல்வேறு நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் ஈடுபடும்போது, பிராந்திய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துகிறது என்றும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை அமைதியாக பேணுவதற்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

இதேநேரம் இந்திய பாதுகாப்பு அமைச்சர், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மோதல்கள் ஏற்படாத வகையில் அதனை அமைதியான பிராந்தியமாக பேணுவதற்கு இலங்கை வழங்கும் பங்களிப்பிற்கு  பாராட்டு இதேநேரம் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here