நேற்றுமுந்தினம் இரவு 11.30 மணியளவில் நெல்லியடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மது போதையில் வந்த ஒருவர் அங்கு பெற்றோல் நிரப்பும் பணியில் ஈடுபட்ட ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

நேற்றையதினம் 11.30 மணியளவில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இருவர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

இதன்போது அங்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு இருந்தவர் மீது கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார். இதன்போது அங்கு பணியில் ஈடுபட்டவரும் கதிரையால் தாக்கியுள்ளார்.

இதன்போது எரிபொருள் நிரப்பியவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர் அங்கு இருந்தவர்களால் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடி பொலிஸார் உடனடியாக ஒருவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here