கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது நாட்டில் எரிபொருளுக்காக வரிசைகளை உருவாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைத்தது.
எரிபொருள் வரிசையினை உருவாக்குவதா கட்டமைப்பு மாற்றம் என்பதை கேட்க விரும்புகின்றேன்.
எரிபொருள் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தம் ஒருதலைபட்சமாக மீறப்படும்போது இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என்பது இந்த அரசாங்கத்திற்கு விளங்கவில்லையா?
இவர்களுக்கு நாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான இயலுமை இல்லை.
அத்துடன், அதற்கான தெளிவு மற்றும் பொருத்தமான நபர்கள் தற்போதைய அரசாங்கத்தில் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.








