மின்னணு வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் முறைமையில் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல் நடவடிக்கை காரணமாக 8 மாகாணங்களில் மின்னணு வருமான அனுமதிப்பத்திர சேவை இன்று (25) முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 28ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி மத்திய, வடமத்திய, வடமேல், தென், கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ, ஊவா ஆகிய 8 மாகாணங்களில் இந்த சேவை எதிர்வரும் 28ம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.
பயனர்களுக்கு மிகவும் நேர்த்தியான மற்றும் சிறந்த சேவையை வழங்கும் நோக்கத்துடன் இந்த அமைப்பின் புதுப்பித்தல் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் 29ம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் இந்த சேவைகளை மீண்டும் வழமை போன்று பெற்றுக்கொள்ள முடியும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.








