நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது.
இதன்படி 2025ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது.
மே மாதத்தில் மாத்திரம் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 919 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மே மாதத்தில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
அவர்களின் மொத்த எண்ணிக்கை 47,001 ஆகும்.
மேலும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 9,221 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 8,803 சுற்றுலாப் பயணிகளும், பங்களாதேஷிலிருந்து 7,282 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 7,223 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 5,929 சுற்றுலாப் பயணிகளும் மே மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 10 இலட்சத்து 29 ஆயிரத்து 803 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்த்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் முன்னேற்றமே இதற்கு காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.








