ஏமன் தலைநகர் சனாவில் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களில் குறைந்தது 19 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இருபது பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்தி கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஹமாஸுக்கு ஆதரவாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி 100க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களை குறிவைத்து அழித்துள்ளனர். இதற்கு பதிலடியாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் ஆகியவை முன்னர் பல சந்தர்ப்பங்களில் ஏமனின் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைத் தாக்கியுள்ளன, மேலும் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனும் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஈடுபட்டார்.
டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும், மேலும் உலகின் நீர்வழிகளில் அமெரிக்க வணிக மற்றும் கடற்படைக் கப்பல்கள் சுதந்திரமாகப் பயணிப்பதை எந்த பயங்கரவாத சக்தியாலும் தடுக்க முடியாது என்று கூறிய ஜனாதிபதி டிரம்ப், ஹவுத்திகளை ஆதரிப்பதை எதிர்த்து ஈரானை எச்சரித்தார்.







