நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று (11) ஆரம்பமாகியுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்ததாவது,
நாடு முழுவதும் 2,787 நிலையங்களில் நடைபெற்ற இந்த பரீட்சையில் 3,79,951 மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும் திருத்தும் பணிகள் ஆகஸ்ட் 22 முதல் 27 வரை 43 நிலையங்களில் நடைபெறும் என்றும் பெறுபேறுகள் செப்டம்பர் 20க்குள் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை நள்ளிரவு வரை இணையவழியில் ஏற்கப்படும். பரீட்சைகள் நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.







