நெல் கொள்வனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தற்போது விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

மொனராகலையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், நெல் களஞ்சியசாலைகளில் உள்ள நெல் விடுவிக்கப்படும் என்றும், நெல்லுக்கான உரிய விலை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பெரும்போகத்தில் விவசாயிகளுக்கான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்பதால், போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று மேலும் அவர் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here