அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 75,000 உரிமங்கள் ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நியமன உறுப்பினர் வஜிர அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நிதியமைச்சு ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் அனுமதிப் பத்திரத்திற்கான வாகனங்கள் நிச்சயமாக வழங்கப்படும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இந்த நாட்டிலேயே அரச ஊழியர்கள் மிகவும் ஆதரவற்ற குழுவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் விதிமுறைகள் மீதான விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here