யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இன்று (04.09) அதிகாலை இரு இளைஞர்களுடன் கடற்றொழிலுக்குச் சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, ஒருவர் பாதுகாப்பாகக் கரை சேர்ந்துள்ள நிலையில், மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினரும், மீனவர்களும் இணைந்து ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








