கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு வியாபாரத்துக்காக 10 கிராம் ஐஸ் போதைப்பொருளை எடுத்து வந்த காத்தான்குடியைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரி ஒருவரை நேற்று திங்கட்கிழமை (31/03/2025) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொழும்பில் இருந்து 10 கிராம் 33 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளை எடுத்து கொண்டுவந்த வியாபாரி ஒருவரை சம்பவதினமான நேற்று இரவு காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மடக்கிபிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]








