பெந்தோட்டை பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றில் இன்று (23) அதிகாலை ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஒன்றரை கிலோ கிராம் அம்பர் (திமிங்கில வாந்தி) வைத்திருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிந்திவெல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரும், பியகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








