ஒஸ்கார் விருது பெற்ற ‘நோ அதர் லண்ட்’ என்ற பலஸ்தீன ஆவணப்படத்தின் இயக்குநரான ஹம்டான் பலாலை இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

மேற்குகரையில் கிராமங்கள் அழிக்கப்படுவதை பதிவு செய்த இயக்குநர்களில் ஒருவரான ஹம்டான் பலாலை 15க்கும் மேற்பட்ட யூதர்கள் முகக்கவசம் அணிந்தவாறு தாக்கினார்கள் என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த யூத அமெரிக்க செயற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது ஹெப்ரோனின் தென்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் ஹம்டான் பலால் கைது செய்யப்பட்டதையடுத்து சர்வதேச அளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here