அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின்  ஹூஸ்டன் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின்போது இருதரப்பினருக்கிடையே  ஏற்பட்ட வாக்குவாதத்தில்  ஒரு தரப்பினர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றவேளை  பொலிஸாரின் வருகையை அறிந்த குற்றவாளிகள் தப்பி ஓடி விட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்  காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

சிகிச்சையில் 4 பேரின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு  குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here