யாழ்ப்பாணத்திற்கான ஏ-9 பிரதான வீதி ஓமந்தை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன்படி, வாகன சாரதிகள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அல்லது மதவாச்சி, செட்டிக்குளம், மன்னார் ஆகிய மார்க்கங்களில் யாழ்ப்பாணத்தை அடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.








