ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்கலாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் படி, சில வரப்பிரசாதங்கள் மீள வழங்கப்பட வேண்டும். எனினும், பாதுகாப்பு விடயங்கள் சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

இதனால், முன்னாள் ஜனாதிபதிகள் தாங்கள் அனுபவித்த வரப்பிரசாதங்களிலிருந்து சிலவற்றை மீள அரசாங்கத்துக்கு ஒப்படைத்து வரும் நிலையில், சிலர் பயன்படுத்திய பாதுகாப்பு வாகனங்களை கூட மீள பெற்றுள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் தொடர்பான கோரிக்கைகள் முன்னாள் ஜனாதிபதிகளால் முன்வைக்கப்படுமானால், அரசாங்கம் அதை பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாகவும், சட்டத்தின் வரம்புக்கு வெளியான பாதுகாப்பு விடயங்களை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here