காலி, நாகொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவ துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த 23 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகொடை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு நேற்று (06) மாலை இந்த கைது நடந்தது.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஒரு தோட்டாவை மட்டுமே சுடும் திறன் கொண்டது, அதேபோல் இரண்டு சுடப்படாத தோட்டாக்களும் மீட்கப்பட்டன.

சந்தேக நபர் மாபலகமவில் பகுதியை சேர்ந்தவர். விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நாகொடை பொலீசார் சம்பவத்தை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here