இலங்கை விமானப்படையின் (SLAF) தற்போதைய தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஜனவரி 29 அன்று ஓய்வு பெறவுள்ளார்.

தற்போது பதவி நீடிப்பில் இருக்கும் ராஜபக்ஷ, இலங்கையின் 19வது விமானப்படைத் தளபதியாவார். அவர் ஜூன் 30, 2023 அன்று பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் சேவை நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என தற்போதைய அரசாங்கம் கொள்கை முடிவொன்றை எடுத்துள்ளது, இது ராஜபக்ஷவின் ஓய்வு பெறுவதற்கு வழிவகுத்தது.

இந்த நிலையில், புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பாண்டு எதிரிசிங்க நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here