வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடற்றொழில் சமூகத்தினரின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கடற்றொழில் சமூக பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது உள்ளிட்ட எதிர்கால தீர்மானங்கள் இந்த குழுவின் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here