பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற நான்கு மீனவர்களும் ஒரு வாரமாகியும் கரைதிரும்பாத நிலையில், நேற்றுத் தீவிரமான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து கடந்த ஏழாம் திகதி புறப்பட்ட மீனவர்களையே காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை, கல்முனை, திருகோணமலை மற்றும் முள்ளியானைச் சேர்ந்த மேற்படி நான்கு மீனவர்களும், புறப்பட்ட தினத்திலிருந்து ஒரு வாரத்துக்குள் கரைதிரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இன்னமும் கரைதிரும்பவில்லை. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்ட நிலையில், நேற்றையதினம் தீவிரமான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கரையிலிருந்து 500 கடல்மைல் அளவுக்கு தேடுதல்கள் நடத்தப்பட்டதாகவும் எனினும் மீனவர்களைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மீனவர்களிடம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here