Friday, May 1, 2026
No menu items!

வல்வெட்டித்துறை

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 06 பேர் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்குச் சென்ற நிலையில் , இந்தியக் கடலோர காவல் படையினரால்...

வடபகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்..!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் மே 18ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் முதல் நிகழ்வு இன்று (12) திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில்...

யாழில் மீட்கப்பட்ட பெருமளவு கஞ்சா பொதிகள்..!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவமும், வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 38 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கஞ்சா எடை கணிக்கப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடுப்பிட்டியில் இரவிரவாக துரித கதியில் போடப்படும் காப்பெட் வீதியின்நோக்கம்  என்ன????

தேர்தல் கால அவசரமா? வீதியின் தரத்தை உறுதி செய்யுமாறு மக்கள் கோரிக்கை விட்டுள்ளனர். உடுப்பிட்டி – வல்வெட்டித்துறை வரையிலான வீதியின் மீதி பகுதியையும் காப்பெட்டாக மாற்றி போடப்படும் வேலைகள் மிக வேகமாக இரவிரவாக இடம்பெற்று வருகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திட்டம் முன்மொழிவு செய்யப்பட்டிருந்தாலும் வல்வை நாற்சந்தி வரையிலான குறுகிய வீதி தரமாக போடப்பட்டிருந்தது. அதன்...

வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது…!

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களிடமிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறு பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில்...

கடற்றொழிலுக்காகச் சென்ற நான்கு மீனவர்கள் மாயம் ; தேடுதல் தீவிரம்…!!

பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற நான்கு மீனவர்களும் ஒரு வாரமாகியும் கரைதிரும்பாத நிலையில், நேற்றுத் தீவிரமான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து கடந்த ஏழாம் திகதி புறப்பட்ட மீனவர்களையே காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை, கல்முனை, திருகோணமலை மற்றும் முள்ளியானைச் சேர்ந்த மேற்படி நான்கு மீனவர்களும், புறப்பட்ட தினத்திலிருந்து ஒரு வாரத்துக்குள் கரைதிரும்பியிருக்க வேண்டும். ஆனால்,...

பட்டத்திருவிழாவில் பட்டம் விட்ட இளைஞன் கைது

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் இடம்பெற்ற பட்டத்திருவிழாவில் பட்டம் பறக்க விட்ட இளைஞனை நேற்றைய தினம் (28) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம் (28) பட்டத்திருவிழா ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர். குறித்த பட்ட திருவிழாவில்...

யாழில் . இடம்பெற்ற ராட்சத பட்டத்திருவிழா

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத்திருவிழா நேற்றைய தினம்  (15) நடைபெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர். இதில் அதிகளவிலான போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் ஆகாய விமானம் தாங்கிய...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img