யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கடலில் பயணித்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது.

பெண்ணுக்கு  பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, அம்பியூலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார்.

தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிக்கட்டுவான் அழைத்து வந்து , அங்கு தயார் நிலையில் இருந்த அம்பியூலன்ஸ் வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.

தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here