வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் நாளை வெப்பமான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த ஆலோசனைக்கு அமைய, 13 மாவட்டங்களுக்கு ‘அவதான’ நிலை வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் சில இடங்களில் பகல் நேரத்தில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு ‘அவதான’ நிலை வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.








