பதுரலிய – சீலதோல பிரதேசத்தில் ஆண் ஒருவரும் அவரது மனைவியும் தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த தம்பதியினர் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுரலிய பிரதேசத்தில் பதருகல்ல வத்த பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

விசாரணையில், இறந்தவர் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக மனைவியின் தந்தையை திட்டியபோது, ​​மனைவியின் தந்தை மற்றும் சகோதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தம்பதி மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் மொரபதிய பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 72 வயதுடையவர்களாவர்.

சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here