கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளத்தினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான நட்டஈடு இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து இந்த இழப்பீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

13 ஆயிரத்து 379 ஏக்கருக்கு இன்று இந்த கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று நெல் விவசாயிகளுக்கு மாத்திரமே இந்த நட்டஈடு கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here