கனேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் ஒரு பெண்ணை மஹரகம பொலிஸார் கைது செய்து கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
கனேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த பிறகு, துப்பாக்கிதாரி தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வந்ததாக தெரியவந்துள்ளது.
அதற்காக, குறித்த பெண்ணை நீர்கொழும்பு பகுதிக்கு அழைத்துச் செல்ல நபர் ஒருவர் மஹரகம பகுதிக்கு வந்துள்ளார். அவரையும் கைது செய்த பொலிஸார் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேற்கு மாகாண தெற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) கயங்க மாரப்பனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.








