அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலாஹரிஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார்.

பராக் ஒபாமாவின் இந்த ஆதரவு காரணமாக கமலா ஹரிஸ்  அமெரிக்க அரசியலில் தீவிரமாக செயற்படும் ஜனநாக கட்சியின் தலைவர்களில் அநேகமானவர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.

பில் கிளின்டன் ஹரி கிளின்டன் என ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் உடனடியாக கமலா ஹரிசிற்கு ஆதரவை வெளியிட்ட போதிலும் ஒபாமா ஆதரவை வெளியிடாதது கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் ஒபாமா தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

தனது மனைவியுடன் இணைந்து கமலாஹரிசினை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒபாமா தனது ஆதரவை வெளியிட்டுள்ளதுடன்  குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here