கம்பஹா – கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கணேமுல்ல பொலிஸாரால் புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
கணேமுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








