கொழும்பில்  பிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் தாக்கி கருவை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கணவர் மனைவியின் வயிற்றில் காலால் தாக்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

மேலும் மனைவி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு மாத கரு கலைந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன்  சந்தேக நபரை கொழும்பு  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here