இன்று ஜூலை 23, இலங்கை தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத பீதியூட்டும் நாளாகக் கருதப்படுகிறது. 1983ஆம் ஆண்டு இந்த நாளில், தமிழர்களுக்கு எதிராக நடைப்பெற்ற கடுமையான இன வன்முறைகள் தொடங்கியதாக வரலாறு பதிவு செய்கிறது.

வன்முறைகளுக்கு தூண்டுதலாக, யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட கண்ணி வெடிகுண்டுத் தாக்குதலில் 13 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்ட சம்பவம் இருந்தது. அதன் பிறகு ஜூலை 24ஆம் திகதி இரவு, கொழும்பில் பொரளை பகுதியில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பரவத் தொடங்கின.

இந்த வன்முறைகள் “கறுப்பு ஜூலை” என வரலாற்றில் அழைக்கப்படுகின்றன.

அவை ஜூலை 30 வரை நீடித்து,

சுமார் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்

18,000 வீடுகள் நாசமான

5,000 வணிக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன

90,000 – 150,000 தமிழர்கள் இடம்பெயர்ந்தனர்

சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்தன

இந்த வன்முறைகள் இலங்கை தமிழர்களின் புலம்பெயர்ச்சி அலையை உருவாக்கியது மட்டுமல்லாமல், தமிழர் தேசியத்தோடு தொடர்பான அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்கள் தீவிரமடைவதற்கும் முக்கிய காரணி எனக் கருதப்படுகிறது.

மேலும், இந்த சம்பவங்கள் இலங்கையின் உள்நாட்டு இனப்பிரச்சினையை சர்வதேச மேடைகளில் எடுத்துச் செல்லும் திருப்புமுனையாகவும் அமைந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here