2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk எனும் முகவரி ஊடாக பிரவேசித்து பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் காணப்படுமாயின் 1911 எனும் துரித இலக்கம் அல்லது 0112784208, 0112784537, 0112785922 எனும் தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு பாடசாலைப் பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் பிரிவினை தொடர்புகொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.







