இடைநிலை தரங்களுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின் அதிபர்கள் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் நேர்முகப் பரீட்சைகளை நடாத்தி தெரிவு செய்யப்படுவார்கள்.

இதனைத்தொடர்ந்து மாணவர்களின் பட்டியலை கல்வி அமைச்சின் அனுமதிக்காக அனுப்பி வைப்பார்கள்.

மேலும், இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சை அணுக வேண்டாம் என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here