ஜனாதிபதித் தேர்தலில் கள்ள வாக்களிப்பில் ஈடுபடும் நபர்களுக்கு 2023 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம், ஒரு வருடகால சிறை தண்டனையும் 02 இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் அதிகமான கள்ள வாக்குகளை அளிக்க சிலர் முற்படக் கூடுமென பலக் கட்சிகள் தேர்தல்களை ஆணைக்குழுவிடம் குற்றச்சாட்களை முன்வைத்துள்ளன.

இதனால், வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் தேர்தல் மத்திய நிலையங்களுக்கு கொண்டுசெல்லும்போது, அந்த வாகனத்துடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்ப்பில் இருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் வாகனத்தை பின்தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1981ஆம் ஆண்டு 15 இலக்க சட்டத்தின் பிரகாரம் 500 ரூபா தண்டப்பணமே கள்ள வாக்களிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டது.ஆனால், கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திருத்தத்தினூடாக இந்த தொகை 02 இலட்சமாக அதிகரிக்கப்பட்டது.

எனவே, கள்ள வாக்களித்த குற்றவாளியாக அடையாளம் காணப்படும் நபர்களுக்கு மேற்படி தண்டனைகளை விதிக்கப்படுவதுடன் அவர்களுக்கு 07 ஆண்டுகள் வாக்களிக்கவும் வாக்காளர் பதிவேட்டில் பதியவும் தடைவிதிக்கப்படும் என சிந்தக குலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here